THIS SITE IS USEFULL FOR ALL STUDENTS...!http://questionsbank2u.blogspot.in/, TEACHERS ARE REQUESTED SEND YOUR MATERIALS FOR PUBLISHING. ...

Tuesday, 21 January 2014

ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்


அகமதாபாத்: ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கு, டிசம்பர் 26ம் தேதியான இன்று கடைசி நாள். விண்ணப்பித்தல் செயல்பாடு கடந்த நவம்பர் 15ம் தேதி தொடங்கியது. JEE ஆன்லைன் தேர்வு 2014ம் ஆண்டு ஏப்ரல் 9, 11, 12 மற்றும் 19ம் தேதிகளில் நடைபெறும். குஜராத் அரசைப் பொறுத்தவரை, பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைப் பெற, இந்த JEE தேர்வில் 40% மதிப்பெண்ணும், பள்ளி மேல்நிலைத் தேர்வில் 60% மதிப்பெண்ணும் எடுத்திருக்க வேண்டும். கடந்த ஆண்டு, JEE தேர்வை மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் எழுதினர். இந்தாண்டும், ஏறக்குறைய அதேயளவு மாணவர்கள் எழுதுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அம்மாநில கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

0 comments:

Post a Comment